பிரதான செய்திகள்

காங்கேணனோடை வீதி வடிகானுடன் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்.

(எம்.ரீ. ஹைதர் அலி)

மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமலிருந்த காங்கேயனோடை பிரதான வீதியினை செப்பனிடுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் விடுத்த விஷேட வேண்டுகோளின்பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்கள் மூலம் காங்கேயனோடை பிரதான வீதி  புனரமைப்பிற்காக 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு. கடந்த மாதம் இவ்வீதிக்கான அடிக்கல்லும் நாட்டிவைக்கைப்பட்டு தற்போது வீதி புனரமைப்பிற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மழை காலங்களில் அதிக வெள்ள நீர் தேங்கி நிற்கின்ற இந்த வீதியினை வடிகானுடன் கூடிய வீதியாக புனரமைப்பு செய்து தர வேண்டும் என்று பிரதேச மக்கள் மற்றும் பொது நிறுவனங்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆரம்பத்தில் இவ்வீதிக்கான வடிகான் அமைப்பதற்கு தீர்மானிக்கப்படாதபோதும் மக்களின் வேண்டுகோளிற்கினங்க தற்போது ஒன்றரை அடி அகலமான மூடியுடன் கூடிய வாடிகன்கள் வீதியின் இருபுறமும் அமைக்கப்படவுள்ளது.

5 மீற்றர் அகலமான இருபுறமும் வடிகானுடன் கூடிய கொங்ரீட் வீதியாக அமைக்கப்படவுள்ள இவ்வீதியின்  இப்புனரமைப்பு பணிகளுக்காக தற்போதுள்ள வீதியின் அகலத்தினை விட அதிகப்படுத்த வேண்டியுள்ளதால் பொது மக்களினுடைய வீட்டு சுவர்களை அகற்ற வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதற்கான உத்தேச அளவீடுகள் திங்கள் (19.09.2016) அன்று மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளை பார்வையிடுவதற்கும் வீதி புனரமைப்பு சம்மந்தமான மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் நேரடியாக குறித்த இடத்திற்கு விஜயம் செய்திருந்தார்.unnamed-3

இதன்போது வீதியின் புனரமைப்பு பணிகளுக்கான அளவீடுகளை அவதானித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வீதி புனரமைப்பு பணிகளை துரிதமாக முன்னெடுத்து எதிர்வரும் மழை காலத்திற்குள் பூரணப்படுத்தி வழங்குவதற்கு குறித்த வீதியின் கொந்துராத்து நிறுவன பணிப்பாளருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.   தமது நீண்டநாள் தேவையாக இருந்த இந்த வீதியினை தமது வேண்டுகோளிற்கினங்க வடிகானுடன் கூடிய வீதியாக செப்பனிடுவதற்கு முன்வந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுக்கு பிரதேச மக்கள் இதன்போது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். unnamed-1

Related posts

புதிய திட்டங்களை முன்வைக்கும் அளவுக்கு அதிக அறிவு இந்த அரசாங்கத்துக்கு இல்லை .

Maash

உயிர்களை வேட்டையாடும் காட்டுமிராண்டிகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

wpengine

ஆயுர்வேத திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – உயர்நீதிமன்றம்!

Editor