பிரதான செய்திகள்

கவிஞர் ஏ.இக்பாலின் மறைவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

(பிர்தொஸ் முஹம்மட்)

கல்வியியலாளரும் கவிஞருமான ஏ. இக்பால் தமிழ்கூறும் நல்லுலகுக்கு பல்வேறு வகையான பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். அன்னாரின் மறைவு, தமிழ் இலக்கியத் துறையில் வெற்‌றிடத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும், தர்காநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கல்வியியலாளரும் கவிஞருமான ஏ. இக்பாலின் மறைவு குறித்து, அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அனுதாபச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் உயிரோடு இருந்த காலத்தில், அவரின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியை எழுதிய ஏ.இக்பால் அதை அவரிடம் வாசித்தும் காட்டியிருந்தார். அதுபோல முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாக்காருக்கும் இவர் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆசிரியராகவும், ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகவும் ஏ.இக்பால் கல்விப்பணி புரிந்திருந்தார். அதுபோல கவிதை, சிறுகதை, ஆய்வு என பல்துறையிலும் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார். கலாபூஷணம், சாஹித்திய மண்டல விருது என பல்வேறு விருதுகளை இவர் சொந்தமாக்கிக்கொண்டார்.

ஏ.இக்பாலின் மறைவினால் துயருறும் குடும்பத்தினருக்கு கட்சி சார்பாகவும், எனது சார்பாகவும் ஆறுதல் கூறுவதோடு, அன்‌னாருக்கு மறுமையில் ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போமாக.

Related posts

அரச சேவை ஆட்சேர்ப்பிற்கான வயதெல்லையை 45 ஆக அதிகரிக்கும் பிரேரணை சமர்ப்பிப்பு

wpengine

அமித் வீரசிங்க புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுடன் தொடர்பு.

wpengine

தொடர்ந்து அம்பாறையிலும் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம் .!

Maash