பிரதான செய்திகள்

கள்வர்களைப் பிடிக்க காரிருளில் சென்ற கல்முனை மேயர் ரக்கீப்!

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

கல்முனை மாநகர சபையின் புதிய மேயர் சட்டத்தரணி ரக்கீப் அவர்கள் நேற்றிரவு (06) 10.30 மணி முதல் முன்னெடுத்த நடவடிக்கைகள் இவைகள்தான.

1.நேற்றிரவு (06) சுமார் 10.30 மணியளவில் பயணம் ஆரம்பமாகிறது. முதலில் மருதமுனையிலுள்ள பொதுநூலகத்துக்குள் நுழைகிறார். மின்குமிழ்கள் அனைத்தும் எரிகின்றன. ஆனால், காவலாளியைக் காணவில்லை.குறித்த காவலாளியின் தொலைபேசி இலக்கத்தை தேடிப்பிடித்து அவருடன் தொடர்பு கொள்கிறார் மேயர்.

அப்போது குறித்த காவலாளி வீட்டில் நல்ல உறக்கத்திலிருந்த நிலையில் மேயரின் அழைப்புக்கு பதிலளிக்கிறார். இதன் போது ரக்கீப் மேயர் இவ்வாறான அநியாயங்களைச் செய்ய வேண்டாம். பொதுமக்கள் வரிப்பணத்திலேயே நீ சம்பளம் பெறுகிறீர் எனக் கூறி விட்டு ‘தம்பி இது நல்ல விஷயம் நீங்கள் வீட்டிலேயே இனி தொடர்ந்து படுக்கலாம் எனக் கூறுகிறார். அதன் போது குறித்த காவலாளி மேயருடன் முரண்படுகிறார். தொலைபேசி துண்டிக்கப்படுகிறது.

3.பின்னர் கல்முனை பொதுச் சந்தைக்குள் நுழைகிறார் மேயர்… அங்கிருந்த காவலாளிகளுடன் சந்தையின் உட்பகுதியை சுற்றிப் பார்க்கிறார். அங்கே இடம்பெறும் மாபியா வேலைகளைக் கண்டு பிடிக்கிறார். கல்முனைச் சந்தையின் கண்காணிப்பாளராகச் செயற்பட்ட நபர் சட்டவிரோதமாக கடைகளை நிர்மாணித்து அதனை வர்த்தகர்களுக்கு வழங்கி பல இலட்சக் கணக்கான ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதனை மேயர் ரக்கீப் கண்டுபிடிக்கிறார்.

4.பின்னர் கல்முனையிலுள்ள யார்ட்டுக்குச் (கல்முனை மாநகர சகை்குச் சொந்தமான வாகனங்கள் தரிப்பிடம்) செல்கிறார். அங்கு ஒருவரும் இல்லை. ஆனால், 10க்கும் மேற்பட்டவர்கள் கடமையிலிருப்பதற்கான கையொப்பப் பதிவுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவர்கள் மறுநாள் பகல் (இன்று) 2.00 மணிக்கே கடமையிலிருந்து OFF பெற வேண்டியவர்கள். ஆனால், அவர்கள் இரவுக் கடமையில் இல்லை. போலியாக ஓவர் டைம் (Over Time) பெறுவதும் அம்பலமாகியது.

5.இதனையடுத்து கல்முனை தீயணைப்புப் பிரிவுக்கு மேயர் செல்கிறார். அங்கும் ஒருவருமில்லை. ஏமாற்றமும் கவலையும் கொண்டவராக வெளியேறுகிறார்.

6.தனக்கு எங்காவது ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்ற அங்கலாய்ப்பு, ஆதங்கத்தில் கல்முனை மாநகர சபைக்குள் நுழைகிறார். அங்கே கிடைத்த செய்தியால் புதிய மேயர் ஆட்டம் காண்கிறார். கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான வேனைக் காணவில்லை. அங்கிருந்த காவலாளியிடம் எங்கே வேன்? என மேயர் வினவுகிறார்.

‘சேர் நமது எக்கவுண்டனைக் (Accountant) கொழும்புக்குக் கொண்டு சென்று விட்டு கல்முனைக்கு திரும்பி வந்த வேன் மீண்டும் அவரை அழைத்து வருவதற்காக கொழும்புக்குச் சென்றுள்ளது’ இவ்வாறு காவலாளி கூறியதனைக் கேட்ட கல்முனையின் புதிய மேயருக்கு தலைச்சுற்று ஏற்படுகிறது.

உடனடியாக பின்னால் திரும்பிப் பார்க்கிறார். தான் அங்கு வந்த தனது சொந்த வாகனமும் இல்லாமல் போய் விடுமோ என்ற சந்தேகத்திலேயே திரும்பிப் பார்த்த அவர் உடனடியாக அதில் ஏறி தப்பினோம்.. பிழைத்தோம்.. என்று நினைத்தவாறு வீட்டுக்குச் செல்கிறார்.

சட்டத்தரணி ரக்கீப் அவர்களே உங்களது இந்த முன்னெடுப்புகள் பாராட்டுக்குரியன. மக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

(இன்னும் பல சங்கதிகள் தொடரும்)

Related posts

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைதுசெய்ய நடவடிக்கை!

Editor

மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

wpengine

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவது! சுதந்திரத்தை அடக்கும் செயல்

wpengine