(ஊடக பிரிவு)
நகரத்தின் அபிவிருத்திகள் கிராம மக்களையும் சென்றடைய நுகர்வோர் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு களுவாஞ்சுக்குடி பிரதேசத்தில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் சதொச நிறுவனத்தின் விற்பனை நிலையமொன்று இன்று காலை திறக்கபட்டது.
முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.கணேஷ மூர்த்தியின் வேண்டுகோளின் பேரில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் அழைப்பின் பேரில்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் ,கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த விற்பனை நிலையத்தினை திறந்து வைத்தார்.