நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாவட்ட களநிலவரங்களை கண்காணிப்பதட்காகவும், ஐக்கிய மக்கள் சக்தியில் acmc சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாகவும் 20 ம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் களுத்துறை விஜயம் மேட்கொண்டிருந்தார் .
மஹவத்த அக்கரகொட வட்டாரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களான ஹிஷாம் சுஹைல் மற்றும் பயாஸ் ஹலீம் ஆகியோரின் கட்சிக் கிளை காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வும், மக்கள் சந்திப்பும் இதன்போது இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை தொகுதி அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஜித் பி.பெரேரா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், களுத்துறை மாவட்ட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.