பிரதான செய்திகள்

களுத்துறையில் இடம்பெற்ற மீலாத் விழா

களுத்துறை இஸ்லாமிய வாலிப நலன்புரிச் சங்கம் (IYWS) களுத்துறையில் உள்ள சுமார் 35 குர்ஆன் மதரஸாக்களை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்த எம் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களின் ஜனன தின மீலாத் விழா கடந்த 01.12.2017 அன்று பிற்பகல் 2.3௦ மணியளவில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் சங்கத்தின் இணைத்தலைவர்களான சகோதரர் முஹவ்விஸ் மற்றும் சகோதரர் பாசில் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் சுமார் 45௦ மாணவ, மாணவிகள் பரிசு வழங்கி பாரட்டப்பட்டதோடு வறிய மாணவகளுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. களுத்துறை Royal Travels & Tours உரிமையாளர் அல் ஹாஜ் பார்ஸான் பரிசில்களுக்கு அனுசரணை வழங்கியிருந்தார்.

நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் அப்துல் ஹலீம் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, தனதுரையில் சகல சமயதவர்களையும் இணைத்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் முகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என்றதோடு என் நபி பெருமானார் காட்டிய முன்மாதிரிகளை வாழ்வில் எடுத்து நடக்கவும் பிற சமயத்தவர்களுக்கு வழிகாட்டவும் இந்நாள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்றார். மேலும் நாடு எதிர்நோக்கியுள்ள சமகால சூழ்நிலையில் இனங்களுக்கிடையே ஐக்கியம், புரிந்துணர்வு என்பன இன்றியமையாதவைகள் என்றும் நல்லாட்சி அரசு அதனையே தனது பிரதான குறிக்கோள்களுள் ஒன்றாக கொண்டு செயற்படுகின்றது என்றார்.

மேலும் கௌரவ அதிதியாக முன்னாள் மொரடுவ பல்கலைக்கழக கணிதத்துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி அல்ஹாஜ் எம்.இசட்.எம். மல்ஹர்டீன் அவர்களும் கலந்து கொண்டனர்.

மற்றும் பாடசாலை அதிபர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், பெற்றோர்கள், உட்பட நூற்றுக்கணக்கானவார்கள் இந்நிகழ்வினில் கலந்து கொண்டனர்.

Related posts

பொதுநூலகத்தின் இரகசிய கண்காணிப்பு கமராக்கள் திருட்டு

wpengine

அதிகாரிகள் அரசியல் ரீதியான பாராபட்சங்களோடு நடந்து கொள்கின்ற நிலைமை மாற வேண்டும்- ஷிப்லி

wpengine

வங்காள விரிகுடாவில் தாழ்முக்கம்! வடக்கு,கிழக்கு மோசமான நிலை

wpengine