களனி கங்கையில் ஏற்பட்டுள்ள நீர்மட்டம் அதிகரிப்பு காரணமாக நீரினால்
மூழ்கியிருக்கும் பகுதிகளில் நீர் வடிவதற்கு இன்னும் சில நாட்கள் எடுக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை , களனி கங்கையின் – நாகலகம் வீதியின் நீர்மட்ட அளவீட்டு மானி அதிகபட்ச
அலகை எட்டியது. களனி ஆற்றின் நீர்மட்டம் இன்று மாலை 7.6 அடியாக காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் இது 7.4 ஆக காணப்பட்டது.
அதனடிப்படையில் நீரில் மூழ்கியிருக்கும் கொழும்பு பகுதிகளில் மேலும் நீர்மட்டம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.