நேற்று சனிக்கிழமை (10) பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் .
உயிரிழந்தவர் 45 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆண் எனவும், சுமார் 5 அடி 8 அங்குல உயரமும் சராசரி உடல் அமைப்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.