பிரதான செய்திகள்

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு: அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

களனி ஆற்றின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.

நாகலகம் வீதியிலுள்ள நீர்மட்ட அளவீட்டு மானியில் 07 மீற்றர் உயரத்திற்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது பாரிய வௌ்ள நிலைமைக்கான அறிகுறி என கொழும்பு பிராந்தியத்திற்கான நீர்ப்பாசன பொறியியலாளர் ஜீ.கே. பத்மகீர்த்தி தெரிவித்தார்.

களனி ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளிலுள்ளவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசன பொறியியலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் வழமைக்கு!

Maash

வடக்கில் 200 பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் 35,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!

Editor

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

wpengine