பிரதான செய்திகள்

களத்தில் சூரியன் கூட்டமைப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் களமிறங்கும் புதிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

ஈஃபி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து புதிதாக உருவாக்கியுள்ள “தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின்” வேட்பாளர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கே தற்போது ஆரம்பமாகி உள்ளது.

புதிய தேர்தல் முறை பற்றிய விடயங்கள், தேர்தலின் போது வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இதில் விளக்கமளிக்கப்பட உள்ளது.

குறித்த கருத்தரங்கில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்களான ம. தியாகராஜா, இ. இந்திரராசா, ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்த்தர் செந்தில்நாதன் உள்ளிட்ட பிரமுகர்களும் அங்கத்துவ கட்சிகளின் செயற்பாட்டாளர்களும், வேட்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

வாக்களிப்பு தொடர்பில் புதிய நடைமுறை விரைவில் மஹிந்த

wpengine

வடக்கில் அரசியல் நோக்கத்துடன் பௌத்தமயமாக்கல்

wpengine

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் திறப்பு

wpengine