கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள் சேவைக்கு அமர்த்தப்பட்டகாலம் தொடக்கம் அவர்களது ஆரம்பச் சம்பளம் இலங்கை ஆசிரியர் சேவையின் (3-ஐ) சம்பளத்திட்டத்தில், அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 843/4, 966/5, மற்றும் பொ. நி.சுற்றறிக்கை இலக்கம் 2/97, 15/2003, 9/2004, 6ஃ2006 என்பவற்றில் 3ஆவது படியாக இருந்தது. பொ.நி.சுற்றறிக்கை இலக்கம் 6ஃ2006(ஐஏ)இல் அது 2ஆவது படியாக மாற்றப்பட்டது.
அது மீளமைக்கப்பட்ட இலங்கை ஆசிரியர்சேவையின் (3-ஐஆ) சம்பளத்திட்டத்தில், அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 1885/38 மற்றும் பொ.நி.சுற்றறிக்கை இலக்கம் 35/2014,அதன் திருத்தம் 35/2014(i) என்பவற்றில் மீண்டும் 3ஆவது படியாக மாற்றப்பட்டது.
அதாவது, அந்த வர்த்தமானியின் 5.1.1.2பந்தியின் குறிப்பு 1இலும், அந்தச் சுற்றறிக்கை மற்றும் அதன் திருத்தம் என்பவற்றின் 7ஆம் பந்தியிலும், 3-ஐஐச் சேர்ந்த 2008.07.01இல் சேவையில் இருக்கும் கல்வியியல் கல்லூரி டிப்ளோமா தாரிகளின் சம்பளம் உள்ளீர்ப்பின்போது 14.640ரூபா 9ஆவது கட்டமாக இருக்கும். அவ்வாறே 2014.12.31வரை புதிதாக நியமனம் பெறுபவர்களின் ஆரம்பச் சம்பளமும் 14.640ரூபா 9ஆவது கட்டமாக இருக்கும்.
ஆரம்பச் சம்பளம், 2015.01.01முதல் மீண்டும் 11ஆவது கட்டமாக மாற்றப்படல் வேண்டும் எனவும், இத்தினத்திற்குப் பின்னரான புதிய நியமனங்களின் ஆரம்பச்சம்பளம், 11ஆவது கட்டமாக அமைதல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அதாவது, சேவையில் இருப்பவர்களுக்கு ஆரம்பச் சம்பளம், 2015.01.01முதல் 15.000ரூபாவான 3ஆவது படியில் இருந்து (11ஆவது கட்டம் தொடக்கம்) கிரமமாக மாற்றி அமைக்கப்படல் வேண்டும். 2015.01.01முதல் புதிதாக நியமனம் பெறுபவர்களுக்கு ஆரம்பச் சம்பளம் 15.000ரூபா 3ஆவதுபடி (11ஆவது கட்டம்) ஆக இருக்க வேண்டும் என்பதாகும். பொ.நி.சுற்றறிக்கை இலக்கம் 3ஃ2016இன்படி 2016.01.01முதல் இச்சம்பளம் 31.060ரூபாவாக இருக்க வேண்டும்.
இந்நிலையில், 2015.05.11முதல் செயற்படும் வண்ணம் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்திலும், 2016.10.06முதல் செயற்படும் வண்ணம் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்திலும்,9ஆவதுகட்டமான 14.640ரூபாவும்,30.300ரூபாவும் குறிக்கப்பட்டிருந்தது.
இரண்டிலும் இரண்டு சம்பளப்படிகள் குறைக்கப்பட்டுள்ளதை சங்கம், கல்வி அமைச்சின் செயாலாளருக்கு தெளிவாக சுட்டிக் காட்டியதையடுத்து, நுனு/2/29/2/25(iii) மற்றும் நுனு/2/29/2/2/5 (iஎ) இலக்க கடிதங்கள் மூலம் 11ஆவது கட்டமான 15.000ரூபாவாகவும், 31.060ரூபாவாகவும் ஆரம்பச் சம்பளத்தை மாற்றியமைக்க அனுமதித்துள்ளார்.
இந்த மூன்று வகை சம்பள மாற்றியமைப்புக்களும் கிடைக்கப்பெறாத கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் 077 239 9156 இலக்கத் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.