பிரதான செய்திகள்

கல்வியாண்டுக்கான பாடநூல்களை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடதாசி தட்டுப்பாடு காரணமாக பாடசாலை பாடநூல்களை அச்சிடும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக வரையறுக்கப்பட்ட அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பதில் பொது முகாமையாளர் ரஞ்சித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

விநியோகஸ்தர்களிடம் கடதாசிகள் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் கல்வியாண்டுக்கான பாடநூல்களை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நான்கு மில்லியன் பாடசாலை பாடநூல்களை அச்சிட சுமார் மூன்று மெற்றி தொன் கடதாசிகள் தேவை.

அத்துடன் ஒரு மெற்றி தொன் கடதாசியின் விலை இரண்டு லட்சம் முதல் அதிகரித்துள்ளது. பாடசாலை நூல்களை அச்சிடுவதே கூட்டுத்தாபனத்தின் பிரதான வருமான வழி.அது கிடைக்காது போனால், கூட்டுத்தாபனத்திற்கு ஆயிரத்து 200 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும்.

அத்துடன் அரச நிறுவனங்களுக்கு தேவையான ஆவணங்களை அச்சிட்டு கொடுப்பதற்கு தேவையான கடதாசிகளை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு லொத்தர் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன எனவும் ரஞ்சித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை டொலர் பற்றாக்குறை காரணமாக கடதாசிகளை இறக்குமதி செய்ய முடியவில்லை என இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.

Related posts

அரசியலமைப்பு மாற்றம் இவ்வரசுக்கு ஆப்பாகுமா?

wpengine

அஸாத்சாலி சொன்ன தலாக்

wpengine

கூகுள் கோட் இன் – 2019 இந்துக் கல்லூரி மாணவன் முதலாமிடம்

wpengine