பிரதான செய்திகள்

கல்முனை ஹுதாப் பள்ளியில் விசேட மார்க்க சொற்பொழிவு

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

ஹுதா அழைப்பு வழிகாட்டல் பணியகத்தின் ஏற்பாட்டில், ‘விசேட மார்க்க சொற்பொழிவு’ நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 04.30 தொடக்கம் இரவு 9.45 வரை கல்முனை ஹுதா ஜும்ஆப் பள்ளிவாசலில் நடை பெறவுள்ளது.

இந்நிகழ்வில், பிரபல மார்க்க சொற்பொழிவாளர்களான அஷ்ஷேஹ் சாபித் (ஷரயீ), அஷ்ஷேஹ் அப்துல் கனி(ஹாமி), அஷ்ஷேஹ் அப்துல் ஹமீட்(ஷரயீ), அஷ்ஷேஹ் முர்ஷித் (அப்பாஸி) ஆகியோர் சொற்பொழிவாற்றவுள்ளனர்.

இதில் பெண்களுக்கும் விஷேட இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால், உரிய நேரத்திற்கு குடும்ப சகிதம் அனைத்து ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.

Related posts

பசில் வெளிநாடா?கொரோனா வைத்தியசாலையிலா? பல கேள்விகள்

wpengine

சதொச மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Editor

ISIS தாக்குதல்! மன்னார் முள்ளிக்குளம் கடற்படையில் பயிற்சி

wpengine