அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கல்பிட்டி பிரதேசத்தில் கட்சி காரியாலயத் திறப்பு மற்றும் மக்கள் சந்திப்பை மேட்கொண்ட ரிசாட் MP

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேர்தல் பிரச்ச்சாரங்கள் நடந்துகொண்டு இருக்கும் இவ்வேளையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் தொகுதிகளுக்கு ( 22 ) திகதி விஜயம் மேட்கொண்டிருந்தார் .

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் முசல்பிட்டி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் பர்மின், பள்ளிவாசல் துறை இரட்டைத் தொகுதி வட்டார வேட்பாளர்களான வசீம், கெம்லஸ் பெர்ணாந்து, ஏத்தாளை வட்டார வேட்பாளரான சிபான் ஆகியோரின் கட்சிக் காரியாலயம் திறந்துவைக்கும் நிகழ்வில் பங்குகொண்டதுடன் மக்கள் சந்திப்புகளையும் மேட்கொண்டிருந்தார் .

இதன்போது, கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான N.T.M.தாஹிர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

Related posts

மாவீரர் தினத்தை தடுக்கும் கோரிக்கை மன்னார் நீதி மன்றத்தில் நிராகரிப்பு

wpengine

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட்

wpengine

மன்னார் வளங்களை சுரண்டுவதை விட்டு பாதுகாப்போம், விடுக்கப்பட்ட கோரிக்கை.!

Maash