பிரதான செய்திகள்

கல்பிட்டி-நூறைச்சோலை சகோதரனின் தாக்குதல் ஊனமூற்ற சகோதரி உயிரிழப்பு

ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குடா பீ முகாமில் சகோதரனின் தாக்குதலுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் (18.04.2021) நள்ளிரவு இடம் பெற்றுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி ஆலங்குடா பீ முகாமைச் சேர்ந்த விஷேட தேவையுடைய ஐனூல் மரிலியா (வயது 43) எனபவரே தனது சகோதரரின் தாக்குதலில் மரணமாகியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற ஞாயிற்றுக்கிழமை (18) இரவு ஒரே வீட்டில் வசித்து வந்த சகோதரன், தாய் மற்றும் சகோதரிகளுக்கிடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்த சகோதரன் தனது 43 வயதுடைய சகோதரியை இரும்புக் கம்பியினால் கடுமையாக தாக்கியதுடன், 32 வயதான மற்றுமொரு சகோதரியையும், தாயையும் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் 43 வயதாக பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரின் மற்றொரு 32 வயதுடைய சகோதரியும் காயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன் சந்தேக நபரின் தாயும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

இத்தாக்குதலை நடாத்திய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு புத்தளம் மாவட்ட நீதிவான் வருகை தந்து நீதிவான் விசாரனையை நடத்திந பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தமிழ், முஸ்லிம் உறவுகளின் விரிசல் அபாயகரமானது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

wpengine

சற்றுமுன்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வில் ஆஜரானார் ஜீ.எல். பீரிஸ்

wpengine

அத்தியாவசிய உலர் உணவுக்காக மாதாந்த சம்பளம் ஒதுக்கீடு

wpengine