பிரதான செய்திகள்

கல்குடா எல்லை நிர்ணயத்தில் தமிழ் மக்கள் பாதிப்பு! வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்

(அனா)

மட்டக்களப்பு கல்குடா தொகுதியிலுள்ள உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து நேற்று  செவ்வாய்கிழமை வாழைச்சேனையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று பிரதேச கிளை ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை மூன்றாகப் பிரிக்கப்பட்டு கோறளைப்பற்று செயலகப் பிரிவிலுள்ள 12 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி கோறளைப்பற்று பிரதேச சபை அமைக்கப்பட வேண்டும்.

கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராமங்களை உள்ளடக்கி கோறளைப்பற்று தெற்கு பிரதேச சபை அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபையினுள் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள வடமுனை, கல்லிச்சை, ஊத்துச்சேனை, வாகனேரி புணாணை ஆகிய கிராமங்கள் புதிதாக அமைக்கப்படும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச சபையுடன் சேர்க்கப்பட வேண்டும்.

அதேபோன்று கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராமங்களை மாத்திரம் உள்ளடக்கி புதிதாக பிரதேச சபை அமைப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த எமது கிராமங்களில் எல்லையில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பிரதேச செயலகத்தில் முடிவடைந்தது. அங்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதேச செயலாளர் வி.வாசுதேவனிடம் கையளிக்கப்பட்டது.

பொது மக்களால் வழங்கப்பட்ட மகஜர் உரிய முறையில் அரசாங்க அதிபரிடம் ஒப்படைப்பதாக பிரதேச செயலாளர் வாக்குறுதியளித்த பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று பிரதேச கிளை ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியினை குலைப்பும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் ஆதரவாளர்கள் செயற்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதியின் வருகையின் பின் முக்கிய அமைச்சர் பதவி விலகவுள்ளார்.

wpengine

சாபி தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி வைத்தியசபையில் முறைப்பாடுகள் பதிவு

wpengine

நேற்று இரவு கல்முனையில் பூமியதிர்ச்சி !

wpengine