உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடல்நலக்குறைவு காரணமாக தனது 77 ஆவது வயதில் அவர் இன்று சனிக்கிழமை காலமானார்.

மு.க.முத்துவின் உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில் தனது சகோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை இடம்பெற்றது.

மு.க.முத்து மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

Related posts

வட கொரியாவை அடையாளம் தெரியாமல் ஆக்குவேன்! டிரம்ப்

wpengine

இஸ்லாத்தைத் தழுவிய சுஷ்மா சுவராஜ்

wpengine

ஈரான் போரை தொடங்கவில்லை, ஆனால் அதன் முடிவைத் தீர்மானிக்கும்.

Maash