உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கலிபோர்னியாவில் பதாவை நீக்கிய பொலிஸ்! பெண்ணுக்கு இழப்பீடு

அமெரிக்காவில் இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை பொலிசார் நீக்கிய குற்றத்திற்காக அப்பெண்ணிற்கு 85,000 டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் Kirsty Powell என்ற இஸ்லாமிய பெண் வசித்து வருகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஒரு விசாரணைக்காக அந்த இஸ்லாமிய பெண்ணை பொலிசார் Long Beach காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது, அவர் அணிந்திருந்த பர்தாவை நீக்குமாறு பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.

‘யாரும் இல்லாத ஒரு இடத்தில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் தான் தனது பர்தாவை நீக்க வேண்டும்’ என அப்பெண் முறையிட்டுள்ளார்.

ஆனால், பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த ஒரு ஆண் பொலிஸ் அதிகாரி அவருடைய பர்தாவை கட்டாயப்படுத்தி நீக்கியுள்ளார்.

 

பிற பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைக்கைதிகள் முன்னிலையில் தனது பர்தா நீக்கப்பட்டதால் அவர் மிகவும் வருந்தியுள்ளார்.

மேலும், இரவு முழுவதும் அவர் பர்தா இல்லாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். மறுநாள் காலையில் விசாரணை முடிந்ததும் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

ஆனால், காவல் நிலையத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை கண்டித்து அவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 85,000 டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் தனியான ஒரு இடத்தில் பெண் பொலிஸ் அதிகாரி மட்டுமே இஸ்லாமிய பெண்களின் பர்தாவை நீக்க வேண்டும்’ எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கிளிநொச்சி விபத்து; மூவர் பலி; டிப்பர் சாரதி கைது!

Editor

புத்தளத்தின் பல பகுதிகளிலும் வௌ்ளம்: மன்னார் வரையான பிரதான வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது

wpengine

புகையிலைக் கன்றுகளுக்கு இடையே கஞ்சா செடி – ஒருவர் கைது .

Maash