பிரதான செய்திகள்

கலரியிலிருந்து பாராளுமன்ற விவாதங்களை பார்வையிட பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்பு

பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற விவாதங்களை பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்கு பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, பாராளுமன்றத்தில் உள்ள பொதுமக்கள் கலரியிலிருந்து பாராளுமன்ற விவாதங்களை பார்வையிட பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக் கிட்டவுள்ளது.

COVID சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்டிருந்தபோதும், பாராளுமன்ற அமர்வு நாட்களில் பார்வையிடுவதற்கான அனுமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.

இதனால் பாடசாலை அதிகாரிகள் தமது விண்ணப்பத்தை படைக்கல சேவிதருக்குக் கடிதம் மூலம், 0112777473 அல்லது 0112777335 எனும் தெலைநகல் மூலம் அல்லது www.parliament.lk என்ற இணையவழியூடாக சமர்ப்பிக்க முடியும்.

Related posts

1990ல் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான அறிவித்தல் – மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான்

wpengine

உலக வங்கியின் வேலைத்திட்டம் இன்னும் விஷ்தரிக்க வேண்டும் அமைச்சர் ஹக்கீம்

wpengine

அதிகாலை நாடு திரும்பினார் பிரதமர் ரணில் !

wpengine