செய்திகள்பிரதான செய்திகள்

கற்பிட்டியில் இருந்து சென்ற ஒருவர், கலா ஓயா ஆற்றில் சிக்கி பலி! யுவதி மாயம் .

நேற்று சனிக்கிழமை கற்பிட்டி, வன்னிமுந்தலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலா ஓயா ஆற்றில் நீராடச்  சென்ற நிலையில் , ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்  42 வயதுடையவர் என்றும், காணாமல் போன பெண் 22 வயதுடையவர் என்றும், 

இருவரும் கற்பிட்டி, வன்னிமுந்தலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரும் காணாமல் போன பெண்ணும் மற்றொரு குழுவினருடன் கலா ஓயாவில் நீராடிய போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், காணாமல் போன பெண்ணைத் தேடுவதற்காக கடற்படை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 

வனாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

‘மதவாதிகளைக் கண்டறிய விசேட குழு நியமிக்கவும்’

wpengine

கள அலுவலர்கள் ,பல அரச நிறுவனங்கள் அத்தியாவசிய சேவைகள்.

wpengine

தலைமன்னார் – தனுஷ்கோடி வரையிலான பாக்குநீரிணையை நீந்தி கடந்து 7 பேர் சாதனை!

Editor