Breaking
Mon. Nov 25th, 2024

நாட்டில் மீண்டும் அதி­க­ரித்­து­வரும் பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­தல்கள், முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு தீ வைத்தல் உள்­ளிட்ட முஸ்லிம் விரோ­தபோ­க்கு­க­ளுக்கு எதி­ராக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் ஜெ.ஜெய்­னு­லாப்தீன் (லாபிர் ஹாஜியார்) நேற்­று­முன்­தினம் மாகாண சபைக்கு கறுப்­பட்­டி­ய­ணிந்து சென்றார்.

அத்­துடன் அங்கு இன­வாத செயற்­பா­டுகள் குறித்து கடும் கண்­ட­னங்­களை தெரி­வித்து உரை­யாற்­றினார்.

அவர் சபையில் உரை­யாற்றும் போது,
நாட்டை இனவாதத்­திற்கு கொண்டு செல்லும் ஒரு சூழ்ச்சி நடை பெறு­கி­றது. அதற்கு நாம் பலிக்­க­டா­வாக முடி­யாது. அர­சியல் செய்­வ­தாயின் அர­சியல் விதி முறை­க­ளின்­படி அணுக வேண்டும். அதனை விட்டு விட்டு பிழை­யான அணுகு முறை­களைக் கொண்­டு­வரக் கூடாது; கையா­ளவும் முடி­யாது.

அண்­மை­காலச் சம்­ப­வங்கள் அதனை  நித­ர்ச­ன­மாக எடுத்­துக்­காட்­டு­கின்­றன. ஒரு சிறிய குழு ஒரு சில இளை­ஞர்­க­ளையும் மத­கு­ருக்­க­ளையும் அழைத்துக் கொண்டு வீராப்புப் பேசித் திரி­கின்­றது. பேசினால் மட்டும் பர­வா­யில்லை. கடந்த சில நாட்­க­ளாக பள்­ளிகள் தாக்­கப்­பட்டு வரு­கின்­றன. மனி­தனை மனி­த­னாக வாழ வழி­காட்­டு­வதே சம­யங்கள்.

சம­யங்­க­ளுக்கு வழி­பாட்டு முறைகள் உண்டு. அவ்­வாறு வழி­ப­டு­வ­தற்கே வணக்­கஸ்­த­லங்கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. அவை பள்­ளி­யாக இருக்­கலாம். கோவில்­க­ளா­கவும் இருக்­கலாம் அல்­லது வேறு ஒன்­றா­கவும் இருக்­கலாம்.

ஆனால் மத வழி­பாட்­டி­டங்­களில் கைவைத்­த­வர்கள் தண்­ட­னையில் இருந்து தப்­பி­ய­தாக வர­லா­றுகள் இல்லை. எனவே மத நிந்­தனை அல்­லது வழி­பாட்டு ஸ்தலங்­களின் மீது தாக்­குதல் நடத்­து­வதை நாகரிக சமூகம் ஏற்றுக் கொள்­ளாது. அண்­மையில் சில பள்­ளி­களில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களை வன்­மை­யாகக் கண்­டிக்­கிறேன். அதற்கு எனது எதிர்ப்பைத் தெரி­விக்கும் வகை­யில்தான் நான் இன்று கறுப்­பட்டி அணிந்து வந்­துள்ளேன்.

எனக்கு தமிழ், முஸ்லிம், சிங்­கள இனங்­களைச் சேர்ந்த முத்­த­ரப்­பி­னரும் வாக்­க­ளித்துள்­ளனர். என்னால் எனக்கு வாக்­க­ளித்த மக்­களை ஏமாற்ற முடி­யாது. நான் பிரதிநிதித்­துவப் படுத்­து­வது இன, சாயம் பூசிய கட்­சி­யல்ல. ஐக்­கிய தேசியக் கட்­சி­யாகும். எனவே எம்மில் ஐக்­கியம் உண்டு. நாம் சக­ல­ரையும் அர­வ­ணைத்துச் செல்லும் ஒரு கட்­சி­யினர். எனவே இன­வாதம் மத­வாதம் பேசும் சகல செயற்­பா­டு­க­ளையும் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறேன்.

பௌத்­தர்கள் மதிக்கும் மகா­நா­யக்க தேரரை குறை கூறிக்­கொண்டு அவர் முன்­னி­லையில் வந்து ஓர் இனத்தை அழிப்பேன், பள்­ளி­களை உடைப்பேன் என ஒரு­வரால் எப்­படி சவால் விட முடியும். இவ்­வா­றான செயற்­பா­டு­களை கண்டும் காணா­தது போல் இருக்க முடி­யாது. மாகாண சபை என்ற வகையில் இப்­ப­டி­யான விட­யங்­க­ளுக்கு ஒரு தீர்வு பெறப்­பட வேண்­டும எனக் கேட்­கிறேன்.

இவ்­வா­றான பிரச்­சி­னைகள் ஆரம்­பத்­திலே களையப்­பட வேண்டும். தலை தூக்க அனுமதிக்கக் கூடாது. பிரச்சினைகள் பூதாகரமாகிய பின் யோசிப்பதில் பயனில்லை.

மத்திய மாகாணத்தில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு முதலமைச்சருக்கு உண்டு. எனவே அவர் அதனை சரியாகச் செய்வார் என எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *