செய்திகள்பிரதான செய்திகள்

கருணா அணியின் முக்கிய புள்ளி, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அதிரடியாக கைது..!

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றுமொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த கவலுக்கமைய கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் இனிய பாரதி புலனாய்வு பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

குறித்த கைதானது இனிய பாரதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இளைஞர் யுவதிகளை கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கலாக முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு படுகொலை தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமைச்சர் றிஷாட்டை தேடி அம்பாரையில் இருந்து மன்னார் வரை செல்லுவோம் ஞானசார

wpengine

மீள் குடியேற்றம் தொடர்பாக ஆராய புதிய குழு

wpengine

உள்ளுராட்சி மன்றங்களின் நிதி மோசடிகளை தடுக்க வேண்டும்

wpengine