Breaking
Fri. Apr 19th, 2024

கடந்த காலத்தில் கருணா குழுவாகவும், பிள்ளையான் குழுவாக இருக்கும் போதும் மக்களை மதிக்கவில்லை. மாறாக மக்களை மிதித்த இவர்கள் அரசியல் பிச்சைக்காக மக்களின் வாக்குகளை பெற முயற்சிக்கின்றார்கள்.


அதேவேளை இவர்களைப் போன்ற ஒட்டுக் குழுக்களால் தான் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தாய் தகப்பனின்றி இருக்கின்றார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பு நேற்றைய தினம் காஞ்சிரங்குடாவில் இடம்பெற்றது.


இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,


நாங்கள் இந்த தேர்தல் களத்திலே களமிறங்கியிருப்பது நாடாளுமன்ற ஆசனத்திற்காக அல்ல. இந்த இனத்தின் விடுதலைக்காகவே. விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் இன்று நடுத் தெருவில் நிற்கின்றனர். விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் வடக்கு கிழக்கு பகுதியில் ஒரு அங்குலம் நிலம் கூட சிங்களவர்களால் அபரிக்கப்படவில்லை
ஆனால் எங்களுடைய நடுவீட்டிற்கு சிங்களவன் இன்று வருகின்றான்.

முன்னர் போரை நடாத்திய தற்போதைய ஜனாதிபதி பிரதமர், மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உட்பட பௌத்த பிக்குகள் வடக்கு கிழக்கை அபகரிக்க திட்டமிட்டு செயலணி அமைத்து தமிழ் மக்களை அடிமையாக்கி இந்த நாடு சிங்கள பௌத்த நாடு எனவும் இங்கு தமிழர்களுக்கு கலாச்சாரம் இருக்க கூடாது , மொழி, பொருளாதார கட்டமைப்பு இருக்க கூடாது என்பதற்காக இத்தனை கட்சிகளையும் அரசாங்கம் உருவாக்கி வைத்துள்ளனர் .


சூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும் அது மகிந்த ராஜபக்சவின் அடிவருடிகள் தான். அவ்வாறே தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ராஜபக்சவின் அடிவருடிகள் தான் எனவே இவர்கள் அவர்களிடம் ஒன்றும் தட்டிக் கேட்க முடியாது.


கடந்த ரணில் அரசாங்கத்தை கவிழ்த்து ராஜபக்ச ஆட்சியை பிடித்து 52 நாட்கள் நடந்த அந்த பாராளுமன்றத்தில் தமக்கான பிரதமரை கொண்டுவர இந்தியா அமெரிக்காவின் போட்டி அந்த போட்டியியை அப்போது தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இருந்தபோதும் எந்த பேரம் பேசலும் இல்லாது ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *