பிரதான செய்திகள்

கரம் போட்டியில் வவுனியா! மாணவி வெண்கல பதக்கம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 33 தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வில் 20 வயதிற்கு கீழ் பெண்களுக்கான கரம் சுற்றுப் போட்டி கடந்த 03.10.2017 தொடக்கம் 05.10.2017 வரை கொழும்பு நுகேகொட சமுத்திராதேவி பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.

மேற்படி கரம் சுற்றுப் போட்டியில் வட மாகாணத்தின் வவுனியா தெற்கு வலய பாடசாலையான வவுனியா அல் இக்பால் மகா வித்தியாலய அணி மூன்றாம் இடத்தினை (வெண்கல பதக்கத்தை) பெற்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

அரையிறுதி ஆட்டத்தில் கொழும்பு, நுகேகொட சமுத்திராதேவி பெண்கள் கல்லூரியிடம் வவுனியா அல் இக்பால் மகா வித்தியாலயம் தோல்வியை சந்தித்ததுடன், 3ம் நிலைக்கான போட்டியில் யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியுடன் மோதி வெற்றியை தனதாக்கியது.

மேற்படி கரம் சுற்றுப் போட்டியில் தங்க பதக்கத்தினை கொழும்பு மஹமாஜா பெண்கள் கல்லூரி தனதாக்கியதுடன் ,வெள்ளிப் பதக்கத்தை கொழும்பு நுகேகொட சமுத்திரா தேவி பெண்கள் கல்லூரி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘இலங்கையுடனான வர்த்தகத்தில் வளைகுடா நாடுகள் ஆர்வம்’ ஐக்கிய அரபு அமீரக தூதுவர் தெரிவிப்பு

wpengine

காதலிப்பதற்காக தொலைக்காட்சிக்கு சென்ற யோஷித்த ராஜபக்ச!

wpengine

மன்னார்-கற்கடந்த குளம் மற்றும் அச்சங்குளம் பகுதி தனிமைப்படுத்தல்

wpengine