பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கயிற்றைப் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு தனது பெண் தோழிக்கு நேரலை காணொளி அழைப்பை எடுத்து மிரட்டிய ஆண்

தனது பெண் தோழியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (16) மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் (வயது -31) என்ற இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அச்சகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

அவர் தான் தங்கியிருக்கும் அறையில் கதிரையில் ஏறி கூரை மரத்தில் கயிற்றைப் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு தனது பெண் தோழிக்கு நேரலை காணொளி அழைப்பை எடுத்து மிரட்டியுள்ளார்.

எனினும் கதிரை சரிந்ததால் நிலை தடுமாறிய இளைஞனின் கழுத்தில் கயிறு இறுகியதால் அவரது உயிர் பிரிந்தது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சரவையில் இன்று மாற்றம் ஏற்படலாம்

wpengine

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு குறுக்கே நிற்பதாக இல்லை அமைச்சர் ஹக்கீம்

wpengine

மன்னார் ஆயருக்கும் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் சந்திப்பு

wpengine