பிரதான செய்திகள்

கம்மன்பில – பிள்ளையான் சந்திப்பின்போது பிள்ளையான் அழவில்லை. – அமைச்சர் ஆனந்த விஜேபால

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர், தனது சுயவிருப்பின்பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருக்கிறார்.

கொழும்பில் ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஆனந்த விஜேபால,

கம்மன்பில – பிள்ளையான் சந்திப்பின்போது பிள்ளையான்  அழவில்லை. 

அந்த சந்திப்பின்போது அருகில் இருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் தான் இதனை வினவியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஈஸ்ரர் ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணையை குழப்பும் வகையில் கம்மன்பில செயற்படுகிறார்.

பிள்ளையானுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவர் விசாரணைக்கு சுயமாகவே வருகிறார் என்றால் அவர்கள் இந்த விசாரணைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கறுப்­புப்­பட்டி அணிந்து சபைக்கு சென்ற லாபிர்

wpengine

அரசியல்வாதிகளை சந்தித்திருக்கிறேன்! அனைவரும் மக்கள் நலன்சார்ந்த விடயங்களை என்னிடம் கேட்கவில்லை.

wpengine

மத்திய அரசு வழங்கும் நிதியை சரியாக பயன்படுத்த தெரியாத முதலமைச்சர்

wpengine