பிரதான செய்திகள்

கம்பெரலிய திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதான அபிவிருத்தி திட்டமான கம்பெரலிய திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நிதியமைச்சினால் இந்த தீர்மானம் குறித்து அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

கடந்த அரசாங்கத்தின் பிரதான அபிவிருத்தி திட்டமான கம்பெரலிய வரவு செலவுத்திட்ட யோசனை ஊடாக செயற்படுத்தப்பட்டது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் மாத்திரம் செயற்படுத்தப்படும் என்றும் புதிய திட்டங்களை நிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.

இது சம்பந்தமாக அமைச்சரவைக்கு யோசனை ஒன்றும் சமர்பிக்கப்பட உள்ளது.

Related posts

அரச ஊழியர்களுக்கு சந்தோஷமான செய்தியினை வெளிப்படுத்திய அமைச்சர்

wpengine

ஞானசார தேரரின் உயிர் அச்சுறுத்தல் திலந்த வித்தானகே

wpengine

ரணிலிடம் 5கோடி பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்

wpengine