அரசியல்செய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் (21) கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர்களை சந்தித்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடினார்.

மேற்படி கலந்துரையாடல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.

இதன் போது கம்பஹா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் கட்சி தனித்துப்போட்டியிட வேண்டும் என்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் உயர்பீட உறுப்பினர் நாஸிக், மீரிகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் எம்.யு. ஆதிக், வத்தளை தேர்தல் தொகுதி அமைப்பாளர் இக்பால் மற்றும் மினுவாங்கொடை இம்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

அக்கரைப்பற்றில் இன்று ACMC இன் முதலாவது மக்கள் சந்திப்பு ..!

Maash

தத்தெடுத்த குழந்தை சித்திரவதை செய்து கொலை , தம்பதியினருக்கு மரண தண்டனை ..!

Maash

லசந்த விக்ரமதுங்க கொலை சம்பந்தமான , சட்டமா அதிபர் குற்றச்சாட்டுக்களில் அரசாங்கம் தலையிட வேண்டும்.

Maash