பிரதான செய்திகள்

கம்பளை – நுவரெலியா குடிக்கத் தண்ணீர் கோரி வீதிக்கு இறங்கிய மக்கள்

குடிநீரைப் பெற்றுக் கொடுக்குமாறு கோரி, இன்று (03) கம்பளை – உடபளாத்த பிரதேசசபைக்கு முன்னால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றது.

கம்பளை, தெல்பிடிய, இஜிராகம, நவதேவிட, ஸ்டோபீல் உட்பட எட்டு கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களை இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, தெல்பிடிய பள்ளிவாசலுக்கு முன்னால் ஆரம்பமாகி உடபளாத பிரதேச சபைக்கு முன்னால் கூடிய பேரணியால், கம்பளை – நுவரெலியா வீதியில் சிறிது நேரம் வாகன நெறிசல் ஏற்பட்டது.

இந்தநிலையில், பிரதேசசபையின் செயலாளர் பீ.சீ.முத்துகல இந்தப் பிரச்சினை தொடர்பாக உள்ளூராட்சி ஆணையாளருடன் பேசி, எதிர்வரும் 6ம் திகதி தீர்வைத் தருவதாக வாக்குறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

குறித்த பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்க 2015 ஆண்டு 17 கோடி ரூபா ஒதுக்கியிருந்த போதும், அதிகாரிகளின் அசமந்த போக்கால், சுமார் 400 குடும்பங்கள் இன்று வரை, உரிய குடி நீர் வசதியின்றி கஸ்டங்களை எதிர்கொள்வதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

Related posts

இஸ்லாமிய இயக்கங்களின் தடைகளுக்கு அழுத்தம் வழங்கியது யார் ? அரசின் கைக்கூலிகளான CTJ யை ஏன் தடைசெய்ய வேண்டும் ?

wpengine

27 புரட்சியின் ஆரம்பம்! மஹிந்தவின் மேடையில் முன்று அமைச்சர்கள்

wpengine

முஸ்லிம் விவகாரங்கள் பிரதி அமைச்சரை நீக்கிய ஜனாதிபதி

wpengine