அடுத்த ஆண்டு தங்கள் நாட்டில் மேலும் பலருக்கு “நிரந்தர குடியுரிமை” வழங்கப்படும் என கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2021 ஆம் ஆண்டில், 401,000 வெளிநாட்டினருக்கு அந் நாட்டில் “நிரந்தர குடியுரிமை” வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் தற்காலிக அடிப்படையில் நாட்டில் வசித்து வருவதாக குடிவரவு அமைச்சர் ஜோன் பிரேசர் தெரிவித்தார்.
கனடா தற்போது தனது மக்கள் தொகையை அதிகரிக்கவும், அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் பயிற்சி பணியாளர்களை தமது நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.
கனடா நாட்டில் சிரேஷ்ட மக்கள்தொகை அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள நாடு என்று கூறப்படுகிறது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக, 2020 இல் 185,000 பேருக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது.
இது 2019 உடன் ஒப்பிடும்போது 45% குறைவாகும்.
தற்போது அந்நாட்டின் மக்கள்தொகை சுமார் 38 மில்லியனாக உள்ளது, மேலும் அதை ஆண்டுதோறும் 1% ஆல் அதிகரிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டு மேலும் 411,000 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதை இலக்காகக் கொண்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.