உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 15க்கு மேற்பட்டோர் பலி!

மத்திய கனடாவின் மனிடோபா மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரவூர்தியும் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 25 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் வயோதிபர்கள் எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

ஒரு தொகுதி பொருட்களை வழங்கி வைத்த சித்தார்த்தன் பா.உ

wpengine

ஒரு ரூபாவைக் கூட நீங்கள் எம்மிடம் கோரவில்லை! அஃனாப்பின் தாய் கண்ணீர்

wpengine

மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும்

wpengine