Breaking
Tue. Nov 26th, 2024

இறையாண்மை மிக்க அரபு நாடான கத்தார், செளதி அரேபியா தலைமையில் அதன் வளைகுடா கூட்டாளி நாடுகளால் முன்னுதாரணமற்ற பொருளாதாரத் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்து வருவது, பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக கத்தார் மீது பொருளாதார மற்றும் இராசதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கத்தார் இந்த இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறது.

இதனால் தற்போது, வான்பரப்பு அதற்கு மூடப்பட்டுள்ளது, இறக்குமதிகள் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், கத்தாரிலிருந்து இந்த வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் கத்தாரி பிரஜைகளும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

வளைகுடா நாடுகளின் கூட்டுறவுக் கவுன்சில் உருவகப்படுத்தும், வளைகுடா அரபு ஒற்றுமை என்ற முகமூடி இதன் மூலம் விலகியுள்ளது.

தற்போது நிலவி வரும் இந்த சர்ச்சைகள் பேச்சுவார்த்தைகளின் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டாலும், வளைகுடாவில் இதற்கு முன்னர் நிலவி வந்த இணக்கமான சூழ்நிலை இனிமேலும் நீடிக்காது.

இந்த நடவடிக்கை இப்பகுதியை புதிய மற்றும் அபாயகரமான பாதைக்குத் தள்ளும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

டிரம்ப் அம்சம்

கத்தார் மீதான இந்த நடவடிக்கையை செளதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து உள்ளிட்ட நான்கு நாடுகள்தான் முதன் முதலாக முன்னெடுத்தன.

குறிப்பிட்ட இந்த நான்கு நாடுகளும் சுன்னி பிரிவை சேர்ந்த இஸ்லாமிய தலைவர்களால் வழி நடத்தப்படுகின்றன.

மேலும் இரான் மற்றும் அரசியல்மயமான இஸ்லாம் ஆகிய இரண்டையும், ஜிஹாதிய வன்முறையையும், இந்த நான்கு நாடுகளும் தங்களுடைய ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்க கூடியவகையாக கருதுகின்றன.

இவை இரண்டையும் கத்தார் ஊக்குவிப்பதாக குறிப்பிட்ட நான்கு நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன.

இரானைப் பொறுத்தவரை , இந்த நான்கு நாடுகளும் சுமத்தும் குற்றச்சாட்டுகள் மிகவும் அதிகமானதாகத் தோன்றுகிறது.

பாரசீக வளைகுடாவின் தெற்கு பார்ஸ் / வடக்கு டோம் பகுதியில் அமைந்துள்ள, உலகிலேயே மிகப்பெரிய இயற்கை எரிவாயு தளத்தை கத்தார் மற்றும் இரான் ஆகியவை பகிர்கின்றன.

இதனால், பூகோளம் கத்தார் மற்றும் இரான் ஆகிய நாடுகளை அண்டைநாடுகளாக ஆக்கியிருக்கும் நிலையில், அவை இணக்கமான சூழ்நிலையில் இருக்க வேண்டியுள்ளது.

அரசியல் மயமான இஸ்லாத்தைப் பொறுத்தவரை, வளைகுடாவை சேர்ந்த அரச பரம்பரைகளுக்கு கத்தாரின் செயல்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதை எளிமையாக காணமுடிகிறது.

கத்தாரை தற்போது ஆட்சி செய்துவரும் அல்-தானியின் குடும்பம் தொடர்ச்சியாக இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை ஆதரித்து வருகின்றது.

இந்த அமைப்பு ஒரு இஸ்லாமிய உலகெங்கிலுமான ஒரு இஸ்லாமிய அரசுக்காக (கேலிஃபேட்) பிரசாரம் செய்து வருகிறது.

இத்தகைய ஒரு அரசு அமைந்தால் வளைகுடா நாடுகளில் இருக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள் தேவையில்லாமல் போய்விடும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *