பிரதான செய்திகள்

கதிர்காமம் ஏழுமலையில் கெப் ரக வாகனம் கவிழ்ந்து விபத்து!

கதிர்காமத்தில் ஏழுமலைக்கு பக்தர்களை அழைத்துச் சென்ற கெப் ரக வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஏழுமலையின் மேல் தளத்தில் இருந்து கீழ் தளம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனமே விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற போது வாகனத்தில் 07 பெண்களும் 10 வயது சிறுமியும் இருந்துள்ளனர்.

இந்த விபத்தில் சாரதிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், ஏனையவர்கள் சிறு காயங்களுடன் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா மற்றும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிக்கு கெப் ரக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வஸீம் தாஜுதீன் கொலை! சேனாநாயக்கவை சந்தித்த மஹிந்த,ரோஹித்த

wpengine

அரச கட்டிடங்கள், மதஸ்தலங்களில் சோலர் நிறுவுவது குறித்து வெளியான தகவல்!

Editor

வவுனியாவில் கைது செய்யப்பட்ட கிராம அலுவலர் வைத்தியசாலையில் அனுமதி!

Editor