Breaking
Fri. Nov 22nd, 2024

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கடந்த பல மாதங்களின் பின்பு நேற்று காலை 9 மணிக்கு முசலி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பதில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

அன்றைய கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் றிஷாட்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்,மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் அதே போன்று வன்னி மாவட்ட இணைக்குழுக்களின் தலைவர் சாள்ர்ஸ் நிர்மளநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதீன் வருகை தந்து இருந்தனர்.

ஏற்பாட்டு ஒழுங்கின்மைகள் காரணமாக  பாராளுமன்ற உறுப்பினர் சாள்ர்ஸ் நிர்மளனாதன் அமர்வதற்கு  கதிரை இல்லாதன் காரணமாக பொது மக்கள் முன்னிலையில் அனாகரிகமான முறையில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நடந்துகொண்டார். என பல தெரிவிக்கின்றனர்.

அதனை பார்த்துகொண்டு இருந்த அமைச்சர் றிஷாட் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே! பொது கூட்டத்தில் மனிதர்களை மதிக்க தெரிந்துகொள்ளுங்கள் “காடையணை” போன்று பாராளுமன்ற உறுப்பினர்  நடந்துகொள்ள வேண்டாம் என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் புத்திமதி கூறினார்.

அதன் பின்பு கதிரை கிடைக்கபெற்றதன் பின்பு உரிய இடத்தில் அமர்ந்துகொண்டார். unnamed

வன்னி மாவட்ட இணைக்குழுக்களின் தலைவர் சார்ள்ஸ் கடந்த காலத்தில் இருந்து அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராகவும்,வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளையும், அவர்களுக்குரிய அபிவிருத்திகளையும் தடுக்கும்  ஒரு இணைக்குழு தலைவராக செயற்படுகின்றார். என்பதுகுறிப்பிடதக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *