இன்றைய விவாதத்தில் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் கண்டியில் ஏற்பட்ட சம்பவங்கள் பற்றிக் குறிப்பிட்டார். ஆனால், ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரேரணையின் மிக முக்கியமான பகுதியை தவற விட்டுவிட்டார். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உடனடிப் பாதுகாப்பு வழங்க அரசு தவறிவிட்டதாக எழுத்துமூலமாக அவர் கொண்டு வந்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஏன் இங்கு சிங்கள, தமிழ் மக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது? இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
இன்று அப்பிரேரணை பற்றி பேசிய ரவூப் ஹக்கீமிற்கும்,
அப்பிரேரணையில் கையொப்பமிட்டோருக்கும் தெளிவான குழப்பம் தெரிகின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமே நடந்ததென்று அந்த பிரேரணையில் கூறுவதில் அவர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையில் கையொப்பமிட்டோர் என்ன மனநிலையில் இருந்துள்ளார்கள் என்பதை விளங்க முடிகின்றது. அவர்களுக்கு முஸ்லிம் மக்கள் பாதுகாக்கப்படவில்லை எனக் கூறுவதற்கு கஷ்டமாக இருந்ததால்தான் சிங்கள, தமிழ் மக்களையும் தமது பிரேரணையில் சேர்த்துக் கொண்டார்கள்.