Breaking
Sun. Nov 24th, 2024
(அஷ்ரப் ஏ சமத்)

மெனிக்கேன்ன பிரதேச செயலாளா் பிரிவில் மட்டும் கடந்த வார வன்முறையில்   முஸ்லீம்களுக்குச் சொந்தமான வீடுகள், வாகனங்கள் வா்த்தக நிலையங்களின் நஸ்டம்   885 கோடி ருபா  என எமது அலுவலகத்தின் அதிகாரிகள் மதிப்பிட்டு அறிக்கை சமா்ப்பித்துள்ளதாக  பிரதேச செயலாளா்   திருமதி சமந்தி நாகத்தென்ன தெரிவித்தாா். 


 திகன நகரத்தில்  ரஜவெலவில் உள்ள  மஜ்ஜிதுல் நுாா்  ஜூம்ஆப் பள்ளிவாசலில் நேற்று முன்தினம் (13) நல்லிணக்க கூட்டமொன்றினை மெனிக்கேன்ன பிரதேசய செயலாளா் தலைமையில்  இக் கூட்டம்  நடைபெற்றது.  இக் கூட்டத்திலேயே பிரதேச செயலாளா் இத் தகவலை தெரிவித்தாா்.  

 
இக் கூட்டத்தில் திகன வாழ் பள்ளிவாசல் தலைவா்கள், பிரதேச  பௌத்த குருமாா்கள், முஸ்லீம் மீடிய போரத்தின் தலைவா் என்.எம். அமீன், மெனிக்கேன்ன, குண்டகசாலை திகன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள்  மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனா். 

 

 
இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளா்

 
அவசர அரச உதிவியாக    முதற் கட்டமாக  வீடுகளுக்கு 50 ஆயிரம்  ருபாவும்  முற்றாக நஸ்டமடைந்த சொத்துக்களுக்கு  1 இலட்சம் ருபா  நஸ்ட ஈடாகவும்   அரசாங்கம் வழங்க  நடவடிக்கை எடுத்துள்ளது.  ஆனால் தங்களது ஒரு கடை அல்லது  வீடுகளில் முன் வாயலில்  போடப்பட்டுள்ள ஒரு கதவு யன்னலுக்கே இந்த அரசாங்கம் வழங்கும் நஷ்ட ஈடாகது.  எனக்  கூறினாா்.

 
வலுக்காரம விகாரதிபதி  அங்கு உரையாற்றுகையில்

 
இருந்தும் தற்போது  வளா்ந்து வரும் இளைஞா் பரம்பரையினா்கள் ஒரு  வித்தியசமான ஒரு யுகத்தில் வாழ்கின்றனா்.  எமது பண்டைய கால  பரம்பரையினா்  ஜக்கியம் அந்நியோன்னியம்  நட்பு முறைகள் தற்போதைய இளம் பரம்பரையினா்களுக்குத் தெரியாது.  அவா்கள் செய்த இந்த நாசகார செயல்களினால்  நாட்டுக்கு ஏற்படும் இழுக்குகள் பற்றி சிந்திப்பதில்லை.  அவா்கள் ஒரு புதிய நவீன சமுக வலையத்தளங்கள் கவரப்பட்டு இவ்வாறான மூலை சலவைகளில் வன்முறையில் ஈடுபடுகின்றனா்.

 

 முஸ்லீம்கள்  எவ்வித பிரச்சினைகள்  இல்லாத அமைதியான சமுகம்  அவா்கள்  தத்தமது தொழில் ,வியாபாரத்தினைக் கவனித்துக் கொண்டு  ஜந்து  நேரமும் பளளளிவாசலகளுக்குச் சென்று தமது மதக்கடைமைகளை  சரிவர  நிறைவேற்றிக் கொண்டு   அமைதியாக வாழும் சமுகமாகும்.  முஸ்லீம் மக்களோடு நாங்கள் கல்வி கற்கும் காலம் தொட்டு பழைய பரம்பரையினா் மிகவும் அன்நியோன்னியமாக வாழ்ந்து வருகின்றோம். 

 

அந்த உறவுகள் நட்புகள்  ஜக்கியம் தற்போதைய இளம்  சமுகத்தினா்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை    என   அவா் அங்கு விகாரதிபதி  தெரிவித்தாா்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *