பிரதான செய்திகள்

கண்டி,அம்பாறை தாக்குதலை கண்டித்து ஐ.நா.முன் ஆர்ப்பாட்டம்

(அஷ்ரப் ஏ. சமத்)
முஸ்லீம்களது உரிமைகளுக்கான அமைப்பிணா் இன்று (16) பம்பலப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலின் ஜூம்ஆ தொழுகையடுத்து அமைதியாகச் ஊர்வலமாகச் சென்று கொழும்பில் உள்ள ஜக்கியநாடுகள் அமைப்பின் அலுவலகத்தின் முன்பாக எதிா்ப்பைப் தெரிவித்தனா்.

அத்துடன் அங்கு கடமையில் இருந்த ஜக்கிய நாடுகள் கொழும்புக் காரியாலயத்தின் அலுவலகரிடம் இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லீம்களுக்கு இனைக்கப்படும் அநீதிகள் சம்பந்தமான அறிக்கையை கையளித்து அதனை ஜக்கிய நாடுகள் மணித உரிமை அமைப்புக்கு அனுப்பும்படியும் உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடுத்தனா்.

கடந்தகால அரசாங்கம் தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமுகத்திற்கு தொடா்ந்தும் அநீதிகளை இழைத்து வருவதாகவும் சம்பந்தப்பட்டவா்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் சட்டம் ஒழுங்குகளை முறையாக பாதுகாக்குமாறு அங்கு ஊடககங்களுக்கு அவ் அமைப்பின் சாா்பாக எம். மிப்லாா், சட்டத்தரணி எம். மர்சூர்க்கும் கருத்து தெரிவித்தனா்.

 

Related posts

இணக்க சபை வெற்றிடம்! நிரப்ப நீதி அமைச்சு திட்டம்

wpengine

பத்திரிக்கையாளர் சங்கத்தின் 61வது ஆண்டு விழா ஜனாதிபதி கௌரவிப்பு

wpengine

“பேசுகிறவர்கள் பேசட்டும்” அமைச்சர் றிஷாட் பதியுதீன்

wpengine