செய்திகள்பிரதான செய்திகள்

கணவன் மனைவி தகராறு, காருடன் தீ வைத்துக்கொண்ட கணவனால் முற்றாக எரிந்த கார்.

கொழும்பு – பிலியந்தலை வீரசிங்க மாவத்தை பகுதியில் கார் ஒன்றுக்கு தீ வைத்த நபரொருவர் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் வியாழக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர் 45 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ள நிலையில் காருடன் தனது உடலில் தீ வைத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.

பின்னர் இவர் சிறிது நேரத்தில் காரில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் காரில் பரவிய தீயை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த முயன்றுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் காரானது முற்றாக தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கட்சி கூட்டத்தில் “பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தலைவர்“

wpengine

MERCY தொழிற் பயிற்சிக்காக பயிலுனர்களை சேரத்தல் -2016

wpengine

அஸ்மின் அயூப்பிற்கு எதிர்ப்பு! ஆளும் கட்சி உறுப்பினர்கள்

wpengine