பிரதான செய்திகள்

கணவன் அழகில்லை மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

அனுராதபுரத்தில் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த மனைவி, தனது கணவனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது கணவன் அழகாக இல்லை என்பதனால் அவருடன் வாழ முடியாதென கூறி தம்புத்தேகம பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

26 வயதான குறித்த பெண் 35 வயதான கணவன் தொடர்பிலேயே முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த பெண் 16 வயதாக இருக்கும் போது இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார். அதற்கமைய 17 வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த திருமணத்தில் ஒரு குழந்தையை பெற்றுள்ளார்.

அவர்களுக்கு பிறந்த பிள்ளை தற்போது பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருக்கின்றது.
சில காலங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த பெண்ணுக்கு திடீரென கணவர் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

கணவர் வயது கூடியவர் என்பதனால் அவர் அழகற்ற நபராகியுள்ளார். அவர் எனக்கு ஒரு போதும் பொருத்தமற்ற நபர் என்பதனால், தான் அவரை விரும்பவில்லை என முறைப்பாட்டின் போது குறிப்பிட்டுள்ளார்.

முறைப்பாட்டினை விசாரணை செய்த பெண் பொலிஸ் அதிகாரி, இந்த விடயம் தொடர்பில் விளக்கம் வழங்க முயற்சித்த போதிலும், அது பயனற்று போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சிறு வயதில் படிப்பை வீணடித்து விட்டு திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு இதுவொரு சிறந்த உதாரணம் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாளை மற்றும் நாளை மறுநாள் தொடர் போராட்டம், தையிட்டி விகாரைக்கு எதிராக.!

Maash

26 ஒசுசல அரச மருந்தகங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபா நஷ்டம்!

Editor

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் ஏலத்தில்..!

Maash