செய்திகள்பிரதான செய்திகள்யாழ்ப்பாணம்

கணவனுடன் முரண்பாடு – 6 மாதக் கர்ப்பிணிப் பெண் ,தனக்குத்தானே தீ வைத்து மரணம்….

இதன்போது வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா (வயது 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் ஆறு மாதங்கள் கர்ப்பிணியாக காணப்படுகின்றார். கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த 2ஆம் மாதம் 20ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.

இந்நிலையில் அயலவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் நாளையதினம் நடைபெறவுள்ளது.

Related posts

முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மது இன்று காலை காலமானார்

wpengine

சைக்கிள் வசமானது பருத்தித்துறை நகரசபை..!

Maash

Emerging Hidayans அமைப்பின் சிறுவர் விளையாட்டு போட்டியும் ஒன்றுகூடலும்.

wpengine