செய்திகள்பிரதான செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கிலோவிற்கும் அதிகமான குஷ் போதைப்பொருள் வைத்திருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், விமான நிலைய அதிகாரிகள் ஒரு பெண்ணிடமிருந்து 1.104 கிலோவும் , மற்றொரு பெண்ணிடமிருந்து 1.856 கிலோவும் , மூன்றாவது பெண்ணிடமிருந்து 2.288 கிலோவும் பறிமுதல் செய்தனர். 

25, 48 மற்றும் 50 வயதுடைய சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டி மற்றும் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் நேற்று இரவு தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை,கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts

அடுத்த பிரதமர் யார்? கரு,சஜித்,அகில

wpengine

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு!-மனுஸ நானயகார-

Editor

பள்ளிவாசல் மீது தாக்குதல்: துரித விசாரணை நடத்த வேண்டும்

wpengine