பிரதான செய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்குச் சென்ற பயணி ஒருவர் கவசத்துடன் கூடிய ஆடையொன்றை அணிந்து சென்றுள்ளார்.

இதனை அவதானித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளனர்.

எனினும் சோதனை செய்வதற்கு அவர் மறுத்துள்ளார். இதனையடுத்து விமான படையினர் நிலத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

இறுதியில் முதுகு எலும்பு சம்பந்தப்பட்ட நோய் காரணமாக பாதுகாப்பான ஆடை அணிந்திருப்பதாக குறித்த பயணி தெரிவித்துள்ளார்.

விமான படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால், விமான நிலைய நுழைவுப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஐ.எஸ். தற்கொலை குண்டுதாரிகள் மேலும் தங்கியிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக சோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக விமான நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

மன்னாரில் விழிப்புணர்வு கலந்துரையாடல்

wpengine

வடக்கோடு, கிழக்கிற்கு நடந்த திருமணம்.

wpengine

நாளை 7மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

wpengine