பிரதான செய்திகள்

கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

சிலர் கட்சி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்த போதிலும் அவ்வாறான ஒரு வீழ்ச்சி ஏற்படவில்லை என குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் கட்சியின் ஆலோசகராக தான் செயற்பட்டு இளைஞர் பரம்பரைக்கு கட்சியை ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சம்பிரதாய அரசியலில் இருந்து மீண்டு கல்வியறிவு மிக்க புதிய சிந்தனைகளை உடைய இளைஞர்களுக்கு சுதந்திர கட்சியை பாரப்படுத்தவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related posts

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மாட்டிக்கொண்ட மைத்திரி

wpengine

22 வயதுடைய யுவதி துஸ்பிரயோகம் – 17 வயது மாணவன் கைது!

Editor

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துக்கள்

wpengine