அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்..!



வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் கட்சிப் பதவிகளிலிருந்து , விலகியுள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே ரவிகரன் பதவி விலகியுள்ளார்.

மேலும், தாம் கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோருக்கு நேற்று கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

wpengine

வட மாகாண கல்வி அமைச்சில் முறைகேடு! கல்வி சமூகம் விசனம்

wpengine

வடகொரியாவை மீரட்டும் பிரித்தானிய பிரதமர்

wpengine