பிரதான செய்திகள்

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பாராளுமன்றில்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அண்மையில் குறிப்பிட்டார்.

எனினும், எதிர்க்கட்சிகள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.

Related posts

பேஸ்புக் தொடர்பில் புதிய நடைமுறை

wpengine

சட்டவிரோத மண் அகழ்வு! செவ்வாய் உப தவிசாளர் பிணையில் விடுதலை

wpengine

மனைவியை கொலைசெய்து பொலிஸில் சரணடைந்த கணவன்.!

Maash