பிரதான செய்திகள்

கட்சித் தலைவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகி நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த விசேட சந்திப்பு நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு ஜனாதிபதி நேற்றைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களிடம் கோரியிருந்தார்.

இந்த விடயம் குறித்து தற்பொழுது விரிவாக பேசப்பட்டு வருவதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கூட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து வாக்கெடுப்பை நடத்துமாறு சபாநாயகர், கட்சித் தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சபை கூடுகின்ற போது மேற்படி வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற குழு இன்று காலை 9 மணிக்கு அவசரமாக கூடுகின்றது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டமும், ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழுக்கூட்டமும், ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழுக்கூட்டமும் இன்று காலை 10 மணிக்கு தனித்தனியாக நடைபெறவுள்ளன.

மேலும், இன்று முற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டமும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசியல் பரபரப்பாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

செல்பி மோகம்! நீரில் மூழ்கிய சோகம்

wpengine

3 வருடங்களின் பின் ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் மே தினக் கொண்டாட்டம் இம்முறை கொழும்பில்!

Editor

சிறுபான்மையினரின் அபிலாஷைகள் பேணப்படுவதற்கு இந்தியா அக்கறை தலையிட வேண்டும்

wpengine