பிரதான செய்திகள்

கடிதங்களில் கையெழுத்திடவும், பதிலளிக்கவும் எனக்கு அமைச்சு பதவி தேவையில்லை-அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க

அமைச்சரவையில் வழங்கும் கடிதங்களில் கையெழுத்திடவும் அல்லது நாடாளுமன்றத்தில் பதிலளிக்கவும் மாத்திரம் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி தேவையில்லை என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க (C.B.Rathnayake) தெரிவித்துள்ளார்.

பணியாற்ற முடிந்தால், பணியாற்ற வேண்டும். வேலை செய்யும் போது காலை பிடித்து இழுக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

வரவு செலவுத்திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

சில நேரம் மக்கள் எம்மை நிராகரிக்கலாம். எமக்கு அமைச்சுக்களை கைவிட செல்ல வேண்டுமாயின் எந்த பிரச்சினைகளும் இல்லை. எனினும் நான் நுவரெலியா மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும். முழு நாட்டு மக்களுக்கும் நான் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் சீ.பி. ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசுக்கு எதிராக விமல்,கம்பன்வில பாரிய மக்கள் போராட்டம் விரைவில்

wpengine

2ஆம் திகதி வேட்பாளர்களை கொழும்புக்கு அழைக்கும் மஹிந்த

wpengine

விக்னேஸ்வரனுக்கு எதிராக 22பேர் கையொப்பம்! விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை

wpengine