பிரதான செய்திகள்

கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பதிவு நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவும்.

ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பதிவு செய்து நேரத்தை ஒதுக்கிக்கொண்ட பின்னர் திணைக்களத்திற்கு வருகை தருமாறு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை கடந்த 17 ஆம் திகதி முதல் நடைமுறையில் உள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், அதிக எண்ணிக்கையிலானவர்கள் முன்பதிவுகளை மேற்கொள்ளாது நேரடியாக வருகை தருவதை அவதானிக்க முடிவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டினை பெறுவதற்கு முன்பதிவு செய்து நேரத்தை ஒதுக்கிக்கொண்டவர்களுக்கு மாத்திரம் சேவை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

http://www.immigration.gov.lk/ என்ற இணையத்தளத்தின் மூலம் அல்லது 070-7101-060 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு முன்பதிவுகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

ஜே.வி.பி . க்கு இரண்டு பிரிவுகள், மற்றைய பிரிவின் தலைவர் அரசியலில் தலைமை தாங்குவதில்லை.

Maash

தேனிலவுக்காக இலங்கை வந்த ரஷ்ய பிரஜை அலையில் அடித்து செல்லப்பட்டு மரணம் .

Maash

கடந்த காலப்பகுதிகளில் 39 தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டோ, காணாமல் ஆக்கப்பட்டோ உள்ளனர்.

Maash