Breaking
Mon. Nov 25th, 2024

கட்டடங்களை அமைக்கும் நடவடிக்கைகளுக்கு கடல் மணலைப் பயன்படுத்தும் தொழிநுட்பம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு கடல் மணலை அரச கட்டட நிர்மாணத்திற்குப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகள்முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் கடல் மணல் குறித்தும் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் சூழல் பிரச்சினைகள் தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

கட்டிட நிர்மாண நடவடிக்கைகளுக்குத் தேவையான மரம் மற்றும் இயற்கை வளங்களுக்குப் பதிலாக சூழல் நட்புடைய கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

திருகோணமலை மாவட்டத்தில் சூழல் அழிவுகள், வனவிலங்கு தொடர்பான பிரச்சினைகள்,சட்டவிரோத மணல் அகழ்வு,குப்பைகளை அகற்றுதல், சதுப்பு நிலங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கமாறு இதன் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி பீ அபேகோன், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் ஆகியோர் இந்த சந்திப்பின் போது கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.14724562_10154472437196327_5182504832299811417_n

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *