பிரதான செய்திகள்

கடற்படை சிப்பாய் தாக்குதல்! அரிப்பு கிராமத்தில் உள்ள ஆறு பேருக்கு விளக்கமறியல்

எஸ்.றொசேரியன் லெம்பேட்

முத்தரிப்புத்துறை கிராமத்திலுள்ள கடற்படை சிப்பாய்கள் இருவர் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அறுவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமர்று மன்னார் நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டார்.

முசலி, முத்தரிப்புத்துறை கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீடு ஒன்றுக்குள் நுழைய முற்பட்ட சந்தேக நபரை துரத்திப்பிடித்த கிராம மக்கள், அவரை தாக்கியுள்ளனர். அவர் கடற்படை சிப்பாய் என்று தெரியவந்ததும், கடற்படையினருக்கும் கிராமமக்களுக்கும் இடையில் முருகல் நிலை ஏற்பட்டது.

இதேவேளை, அவரை காப்பாற்றுவறத்காக சிவில் உடையில் சென்ற மற்றுமொரு கடற்படை சிப்பாயும் மக்களால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான இரண்டு கடற்சிப்பாய்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடற்சிப்பாய்களை தாக்கியவர்கள்  தொடர்பில், கடற்படையினர் பொலிஸாருக்கு விவரங்களை வழங்கவே, குறித்த கிராமத்திலுள்ள அறுவரை சிலாபத்துறை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து வாக்குமூலம் பெற்ற பின்னர், அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன்போதே, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் 24ஆம் திகதியன்று அடையாள அணிவகுப்புக்கு உற்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

Related posts

முன்னாள் MP ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிடியாணை!

Editor

2000 கிராம சேவையாளர்கள் பதவி வெற்றிடம்

wpengine

பெண்களே! கோபத்தால் ஏற்படும் பிரச்சனைகள்

wpengine